TRAVEL DIARY - #OF OLD AGRAHARAM HOUSES AND VATHIMA FOOD @THIRUNALLAM @ KUMBAKONAM
ரதம் என்ற அமைப்பின் வாயிலாக கும்பகோணத்திற்கு ஒரு வழிகாட்டப்பட்ட ஆலய சுற்றுப்பயணம் சென்றிருந்தேன் . சுற்றுப் பயணம் என்று சொல்வதை விட புனிதப் பயணம் அல்லது யாத்திரை என்று கொள்ளலாம் . கும்பகோணத்திற் கு அ ருகில் அமைந்துள்ள சிவஸ்தலங்களான துக்காச்சி , திருவீழ்மிழலை , மற்றும் கோ னே ரிராஜபுரம் என்று மூன்று கோயில்களையும் , ஒரு சாதாரண சேவா செய்யும் சுற்று என்று இல்லாமல் , அந்த கோயில்களின் , தொன்மை , வரலாறு , கோயில் சிற்பங்களின் வெளிப்பாடுகள் என்று விலாவாரியாக விளக்கினார் இந்த புனிதப்பயணத் தை வழிநடத்தி ச் சென்ற திரு . மதுசூதனன் கலைச்செல்வன் அவர்கள் . மிகவும் அறிவுபூர்வமாகவும் , சு வாரஸ்யமாகவும் இருந்தது . அன்றைய தினம் முன்பகல் காலத்தின் கடைசி கோயிலாக திருநல்லம் என்கின்ற கோனேரிராஜபுர...